ராணிப்பேட்டை மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தொடங்கி வைத்தார்

ராணிப்பேட்டை அருகே கால்நடை களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேற்று தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை களுக்கு ஏற்படும் பெரியம்மை நோயில் இருந்து கால்நடைகளை பாதுகாக்கவும், நோய் வராமல் தடுப்பதற்காக விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியத்துக்கு உட்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சி, வடகால் கிராமத்தில் கால்நடை களுக்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்களது ஆடு, கோழி, பசுமாடுகள், பூனை மற்றும் நாய் உள்ளிட்ட விலங்கு களை முகாமுக்கு அழைத்து வந்த னர். கால்நடைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு 200-க்கும் மேற்பட்ட வீட்டு விலங்கு களுக்கு நோய் தடுப்பூசி போடப் பட்டது.

இதையடுத்து, கால்நடைகளை சிறப்பாக பராமரிப்பவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் பாஸ்கர், துணை இயக்குநர் ஜெயராஜ், கால்நடை உதவி மருத்துவர்கள் ஜெயராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்