பார்வையற்ற, செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள் செல்போன் பெற ஜனவரி 8-ம் தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2020-21-ம் நிதியாண்டில் கல்லூரியில் படிக்கும் மற்றும் வேலை வாய்ப்பற்ற சுயதொழில் புரியும் பார்வையற்ற, செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கைப்பேசி வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
18 வயதுக்கு மேற்பட்ட பார்வை யற்ற, செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள் செல்போன் பெற தகுதியுள்ளவர்களாவர். செல்போன் பெற விரும்புவோர், தங்களுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப மற்றும் ஆதார் அட்டை நகல், பணிச்சான்று, வேலை வாய்ப்பு இல்லாதவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் பதிவு அட்டை நகல், சுய தொழில் செய்யும் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அதற்கான சான்றிதழ், பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அண்ணாசாலை, வேலூர் -632-011 என்ற முகவரியில் தபால் மூலமாகவோ, நேரடியாகவே வரும் ஜனவரி 8-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்’’என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago