தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கடலூர் மாவட்டத்தில் 280 தொழில்சார் சமூக வல்லுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, அண்ணாகிராமம், பரங்கிப்பேட்டை, மேல் புவனகிரி மற்றும் குமராட்சி ஆகிய 6 வட்டாரங்களில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த 6 வட்டாரங்களில் உள்ள 280 ஊராட்சிகளில், ஊராட்சிகளுக்கு தலா ஒருவர் வீதம் மொத்தம் 280 தொழில்சார் சமூக வல்லுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கு, குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 20 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். சுயஉதவிக் குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும். மக்கள் அமைப்புகளின் நிர்வாகியாகவோ, மக்கள் பிரதிநிதியாகவோ இருத்தல் கூடாது. தொழில் முனைவோராகவோ அல்லது தொழில் முனைவோர் குடும்ப உறுப்பினராக இருக்கும் பட்சத்தில் முன்னுரிமை அளிக் கப்படும். தொழில் அனுபவம் கட்டாயம் இருத்தல் வேண்டும்.மேற்கண்ட தகுதிகளை உடைய நபர்கள், வரும் 10.1.2021-ம் தேதிக்குள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலமாகவோ அல்லது நேரிலோ வட்டார திட்ட அலுவலகத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியான நபர்கள், எழுத்து மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்,
தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதத்திற்கு அதிக பட்சம் 20 நாட்கள் பணியாற்ற வேண்டும். நாள் ஒன்றுக்கு ரூ.250 வீதம் ஊக்க தொகை வழங்கப்படும். மேலும் தொடர்புக்கு மாவட்ட செயல் அலுவலர், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம், 41,முதல்தளம், இரட்டை பிள்ளையார் கோவில் தெரு, புதுப் பாளையம் கடலூர் என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம். 04142- 210185 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித் துள்ளார்.
மக்கள் அமைப்புகளின் நிர்வாகியாக இருத்தல் கூடாது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago