ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசுஊழியர்கள் மீதான நடவடிக் கைகளை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனத்தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் நடைமுறைப் படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் 22.1.2019 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டம் நிறைவடைந்து 23 மாதங்கள் கடந்தும் ஆசிரி யர்கள், அரசு ஊழியர்கள் மீது போராட்டக் காலத்தில் போடப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதனால் பதவி உயர்வு, வருடாந்திர ஊதிய உயர்வு, ஓய்வூதியப் பயன்களும் கிடைக் காமல் அரசு ஊழியர்கள் பாதிக் கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான நடவடிக்கைகள் அனைத்தையும் அரசு ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago