கந்துவட்டி கும்பலால் அச்சுறுத்தல் எஸ்பியிடம் இளம்பெண் புகார்

By செய்திப்பிரிவு

கந்துவட்டி கும்பலால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இளம்பெண் குடும்பத்துடன் வந்து ஈரோடு எஸ்பி தங்கதுரையிடம் புகார் அளித்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த அத்தாணி கருவல்வாடிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கமலா (26). இவர் நேற்று தனது குடும்பத்தாருடன் வந்து ஈரோடு எஸ்பி தங்கதுரையிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

எனது கணவர் ஆறுமுகம் சரக்குகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ஓட்டி வருகிறார். எங்களது குடும்பத்தேவைக்காக சிலரிடம் அவர் பணம் பெற்றுள்ளார். அதற்கான தொகையைச் செலுத்திய பின்பும், கூடுதல் வட்டி செலுத்த வேண்டுமென கந்துவட்டி வசூலிக்கும் கும்பல் மிரட்டி வருகிறது. இதன் தொடர்ச்சியாக என் கணவரை மிரட்டி, தாக்கிவிட்டு அவரது ஆட்டோவைப் பறித்துக் கொண்டு சென்று விட்டனர். இதையடுத்து அவர் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதுதொடர்பாக ஆப்பக்கூடல் போலீஸில் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதே நேரத்தில் கந்து வட்டி கும்பலைச் சேர்ந்த சிலர், வழக்கைத் திரும்பப் பெற வேண்டுமென மிரட்டல் விடுத்து வருகின்றனர். கந்துவட்டிக் கும்பலால் எங்கள் குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, என் கணவரின் ஆட்டோவை மீட்டுத் தர வேண்டும், எனத் தெரிவித்துள்ளார். மனுவைப் பெற்றுக் கொண்ட எஸ்பி தங்கதுரை, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்