ஜல்லிக்கட்டு நடத்த 20 நாட்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியி ருப்பதாவது:
அரியலூர் மாவட்டத்தில் பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் கிராமத்தினர், 20 நாட்கள் முன்பே மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது, ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம், ஜல்லிக்கட்டு தொடர்பான கிராம கணக்கு புத்தகத்தில் பதியப்பட்டுள்ள விவரம் ஆகியவற்றை குறிப்பிட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு ஜல்லிக்கட்டு நடத்த சில கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டுள்ளன. அதன்படி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளில் 300 மாடுபிடி வீரர்களுக்கு மிகாமலும், எருது விடும் நிகழ்ச்சியில் 150 மாடுபிடி வீரர்களுக்கு மிகா மலும், பார்வையாளர்கள் 50 சதவீதத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாடுபிடி வீரர்கள் தங்களுக்கு கரோனா தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும். பார்வையாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பப் பரிசோதனை செய்ய வேண்டும். முகக்கவசம், தனிமனித இடை வெளியை கடைபிடிக்க வேண்டும்.
அனுமதி பெறும் இடத்தில், ஏற்கெனவே ஜல்லிக்கட்டு நடத்தியதற்கான அனுமதி பெற்ற ஆவணங்கள், பத்திரிகைச் செய்தி உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின், மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி கொடுக்கப்பட்ட பிறகே ஜல்லிக் கட்டு நடத்த வேண்டும் என ஆட்சி யர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago