திருச்சி மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புத்தாண்டு தினத்தையொட்டி டிச.31-ம் தேதி இரவு திருச்சி மாநகரில் அசம்பாவிதம் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மது அருந்தி விட்டு வாகனங்களில் அதிவேகமாகவும், ஆபத்தான முறையிலும் செல்லுதல், பொது மக்களை கேலி செய்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது.
விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையில் 50 குழுக்கள் ஏற்படுத் தப்பட்டுள்ளன.
புத்தாண்டு வாழ்த்து கூறுவ தாக சொல்லிக்கொண்டு பொது மக்களை கேலி செய்தாலும், மக்களுக்கு இடையூறு செய்தா லும் சட்டப்படி நடவடிக்கை எடுக் கப்படும். பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலையில் வாகனங்களை நிறுத்திக் கொண்டு மது அருந்து தல், வெடி வெடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டிச.31, ஜன.1-ம் தேதிகளில் சாலையில் எவ்வித கொண்டாட்டத்திலும் பொதுமக்கள் ஈடுபட அனுமதிக் கப்பட மாட்டார்கள்.
புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் யாரேனும் பொதுமக்களுக்கு இடையூறு செய்தால், அந்த தகவலை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் அவசர தொலைபேசி எண்ணான 100-க்கும், 0431-2418070, 9626273399 ஆகிய எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவிக் கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago