வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடக்கம்

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் பயன் படுத்துவதற்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தென்காசி வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் முதல்நிலை சரிபார்க்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியை தொடங்கிவைத்து ஆட்சியர் சமீரன் கூறும்போது, “நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்த தென்காசி மாவட்டத்துக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 3,260 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,490 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்களித்த விவரத்தை உறுதி செய்யும் 2,680 விவிபாட் இயந்திரங்கள் ஆகியவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. பெல் நிறுவன பொறியாளர்கள் மூலம் இந்த இயந்திரங்களில் முதல் நிலை சரிபார்க்கும் பணிகள் தொடங்கியுள்ளன” என்றார்.

நிகழ்ச்சியில் தென்காசி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) சரவண கண்ணன், தேர்தல் வட்டாட்சியர் அமிர்தராஜ், தென்காசி வட்டாட்சியர் சுப்பை யன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்