திருநெல்வேலி அருகே ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் மார்கழி மாத திருவாதிரை ஆருத்ரா தரிசனம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
ராஜவல்லிபுரம் தாமிரசபை செப்பறை அழகியகூத்தர் திருக்கோயிலில் மார்கழி மாத திருவாதிரை ஆருத்ரா தரிசனம் திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையும், மாலையும் சுவாமி நெல்லையப்பர் உடனுறை காந்திமதி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்று வருகிறது.
கடந்த 27-ம் தேதி காலையில் அழகியகூத்தர் சபையில் இருந்து விழா மண்டபத்துக்கு எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்பின் தேருக்கு சுவாமி, அம்பாள் எழுந்தருளியதும் தேரோட்டம் தொடங்கியது. பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
இன்று அதிகாலை 2 மணிக்கு மகா அபிஷேகம் தொடங்குகிறது. காலை 5 மணிக்கு கோபூஜை மற்றும் ஆருத்ரா தரிசனமும், மதியம் 1 மணிக்கு நடன தீபாராதனையும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், அலுவலர்கள் செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago