வேலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தலைமையில், மாவட்ட ஆட்சியர் சண்முசுந்தரம் முன்னி லையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் செல்வகுமார், சட்டப் பேரவை உறுப்பினர்கள் கார்த்திகேயன் (வேலூர்), லோகநாதன் (கே.வி.குப் பம்), நந்தகுமார் (அணைக்கட்டு), மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தீர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாமல் இருப்பதால் மின் விளக்குகள் பொருத்த முடிவு செய்யப்பட்டது.

காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து கல்புதூர் வரை போடப்பட்ட சாலை தடுப்பில் உள்ள மின் விளக்குகள் எரியாததால் விபத்துகள் ஏற் படுவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

பொன்னை மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பேரணாம்பட்டில் இருந்து குடி யாத்தம் சாலையில் கவுரப் பேட்டை, சிந்தகணவாய் இடையில் அபாயகரமான வளைவில் எச்சரிக்கை பலகை மற்றும் வேகத்தடை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்