வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு தயாரிப்பு பணிகள் தீவிரம்

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு தயாரிப்புப் பணிகள் ஓரிரு நாளில் முடியும் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 பணத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்பட உள்ளன. வேலூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 969 அரிசி ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளன.

மாவட்டம் முழுவதும் வரும் ஜனவரி 4-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்க ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க வீடு, வீடாகச் சென்று டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்குவதற்கு தேவையான பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்டவற்றை பாக்கெட்டுகளில் அடைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வேலூர் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் நடந்து வரும் இந்தப் பணிகள் இன்னும் ஓரிரு நாளில் முடியும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு ரேஷன் கடைகளுக்கு பிரித்து வழங்க உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்