ஆந்திர மாநிலத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் வெள்ளோட்டமாக நேற்று தொடங்கின. இதன்படி, 5 மையங்களில் அனைத்து தரப்பு வயதைச் சேர்ந்த 125 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
கரோனா தொற்றை ஒழிக்கும் விதத்தில் கண்டறியப்பட்ட தடுப் பூசிகளை மனிதர்களுக்கு செலுத் தும் பணி ஆந்திரா, அசாம், பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள சில மையங்களில் வெள் ளோட்டம் பார்க்க அனுமதிக்கப் பட்டது. அதன்படி, ஆந்திர மாநிலத்தில் இதற்கான பணிகள் நேற்று தொடங்கின.
இதற்காக கிருஷ்ணா மாவட் டத்தில் உள்ள விஜயவாடா அரசு மருத்துவமனை, உப்பலூரு ஆரம்ப சுகாதார மையம், சூர்யராவ் பேட்டை பூர்ணாராவ் மருத்துவ மையம், கிருஷ்ணவேணி கல்லூரி மற்றும் பிரகாஷ் நகர் ஹெல்த் சென்டர் ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஒவ்வொரு மையத்திலும் 3 அறைகள் ஏற் பாடு செய்யப்பட்டு, 5 ஊழியர் கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.
முதல் அறையில் தடுப்பூசி போட் டுக் கொள்வோருக்கான விவரங் கள் பதிவு, 2-ம் அறையில் தடுப்பூசி போடும் பணி, 3-ம் அறையில் தடுப்பூசி போட்ட பின்னர் மருத்துவ பரிசோதனை ஆகிய பணிகள் நடந் தன. இவை அனைத்தும் வீடியோ வில் பதிவு செய்யப்பட்டன.
125 பேருக்கு தடுப்பூசி
கிருஷ்ணா மாவட்ட ஆட்சியர் இந்தியாஸ் மற்றும் இணை ஆட்சியர் சிவசங்கர் ஆகியோர் தடுப்பூசி வெள்ளோட்ட மையங் களை நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் ஆட்சியர் இந்தியாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:மத்திய அரசின் நிபந்தனை களின்படி, 5 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் ஒவ்வொரு மையத்திலும் 25 பேர் வீதம் 125 பேருக்கு முதல் நாள் தடுப்பூசி போடப்பட்டது.
சிறுவர்கள், நடுத்தர வயதினர் மற்றும் முதியோர், பெண்கள், ஆண்கள் என அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இரண்டு நாட்கள் தடுப்பூசி வெள்ளோட்டம் பார்க்கப்பட்ட பின்னர் இதற்கான அறிக்கை மாநில, மத்திய அரசு களுக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago