தமிழகத்தில் அடுத்தடுத்து புதிய மாவட்டங்கள் உதயம் அரசுப் பணி ஒதுக்கீடு அமலாவதில் தாமதம்? பதவி உயர்வுக்காக காத்திருப்போர் கவலை

By என்.சன்னாசி

தமிழகத்தில் அடுத்தடுத்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த புதிய மாவட் டங்களில் ஆட்சியர், காவல் கண் காணிப்பாளர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்படுவதாகவும், காவல் துறையில் டிஎஸ்பி, காவல் ஆய்வாளர்கள் மற்றும் பிற அரசுத் துறைகளிலும் கீழ் நிலையிலுள்ள காலியிடங்களை நிரப்ப தாமதம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஓரிரு பதவிகளில் ஒரே அலுவலர் இரு மாவட்டங்களையும் சேர்த்து கவனிக்கும் நிலையும் உள்ளது.

கடந்த சட்டப்பேரவைக் கூட் டத்தில் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில், புதிய மாவட்டங்களில் காவல்துறை பணியிடங்களை நிரப்ப நட வடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இதன்படி, மதுரை நகரில் கோச்சடை, அனுப்பானடி, விழுப்புரத்தில் மேல்மலையனூர், திருவாரூரில் அம்மையப்பன், தருமபுரியில் காரிமங்கலம், மாட்லம்பட்டி, கள்ளக்குறிச்சியில் களமருதூர், திருவெண்ணைநல்லூர், வானகரம், திருமுடிவாக்கம், அரசூரல், பெரம்பலூர் மாவட் டத்தில் அம்மாபாளையம், கரூரில் தாந்தோணி ஆகிய இடங்களில் புதிய காவல்நிலையங்கள் ஏற்படுத்தப்படும். மதுரை, பிற இடங்களிலுள்ள 10 புறக்காவல் நிலையங்கள் முழுநேரக் காவல் நிலையமாக்கப்படும் என முதல் வரின் அறிவிப்பில் கூறப்பட்டது.

தரம் உயர்வு

இதன்படி, மதுரை மாவட்டத்தில் பெருங்குடி, ஆஸ்டின்பட்டி, சாப் டூர், கீழவளவு, காடுபட்டி, அப்பன் திருப்பதி, மேலவளவு ஆகிய 7 காவல் நிலையங்கள் சார்பு ஆய்வாளர் நிலையில் இருந்து ஆய்வாளர் நிலைக்குத் தரம் உயர்த்தப்படும் என அறிவித்த நிலையில், தொடர்ந்து அதே நிலையே நீடிக்கிறது என மதுரை காவல் துறையினர் கவலை தெரி விக்கின்றனர்.

திண்டுக்கல் உட்பட 6 மாநகராட்சிகளில் காவல் ஆய் வாளர், சட்டம், ஒழுங்கு மற்றும், குற்றப் பிரிவு பணியிடங்கள் 53 என மொத்தம் 84 பணியிடங்கள் உருவாக்கப்படும். ஒவ்வொரு புதிய மாவட்டத்திலும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர், குற்றப் புலனாய்வுத்துறை ஆய் வாளர், கியூ பிரிவு ஆய்வாளர், மாவட்டக் குற்றப்பிரிவு ஆய்வாளர், குற்றப் பதிவேடு ஆய்வாளர், காவல் கட்டுப்பாட்டு அறை ஆய்வாளர், மதுவிலக்குப் பிரிவு ஆய்வாளர், நில அபகரிப்புப் பிரிவு ஆய்வாளர், உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் மற்றும் சிபிசிஐடி, பொருளாதார குற்றப்பிரிவு உள்ளிட்ட சிறப்பு புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர்கள் என 15 ஆய்வாளர் பணியிடமும் நிரப்பப்படும் என்ற போதிலும், அதற்கான நடவடிக்கை இல்லை. பொது நிர்வாகம் தொய்வின்றி நடக்க, புதிய மாவட்ட காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து அரசுத்துறை யினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பதவி உயர்வுக்குக் காத்திருப் போர் கூறியதாவது: புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட 6 புதிய மாவட்டங்களிலும் சட்டம், ஒழுங்கைப் பராமரித்தல், 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலையொட்டி புதிய மாவட் டத்துக்கான பணி ஒதுக்கீடுகளை நிரப்ப வேண்டும் என்றனர். இதுகுறித்து உயர் அதிகாரி ஒரு வரிடம் கேட்டபோது, ‘‘புதிய மாவட்டத்தில் அலுவலர் நியமனம் படிப்படியாக நடக்கிறது,’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்