சமீபத்தில் தமிழகத்தில் வீசிய நிவர் புயலால் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பயிர்கள் சேதமடைந்தன. இந்நிலையில், சேத மதிப்பீட்டைக் கணக்கிட மத்தியக் குழு தமிழகம் வந்துள்ளது.
ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட குழு நேற்று மதுரை வந்தது. மத்திய அரசின் கூடுதல் முதன்மைச் செயலர்கள் அசுதேஷ் அக்னிஹோத்ரி தலைமையில் வந்த குழுவினருடன் தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி உட்பட பலர் வந்தனர். இக்குழுவினர் ராமநாதபுரம், தூத்துக்குடி ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய பின் இன்று புயலால் பாதிப்புக்குள்ளான பகுதிகளைப் பார்வையிடுகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago