பொங்கல் திருவிழாவினை யொட்டி அரசு பதிவேட்டில் விடுபட்ட கிராமங்களில் எருது விடும் திருவிழாவினை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட எருது விடும் திருவிழா விளையாட்டு வீரர்களின் பாதுகாக்கும் நலச்சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தங்களின் அனுமதியின் பேரில், கடந்த ஆண்டு பொங்கல் திருவிழாவினையொட்டி எருது விடும் திருவிழாக்கள் அனைத்து கிராமங்களிலும், அரசு விதிமுறைகளை பின்பற்றி சிறப்பாக எவ்வித அசம்பாவிதங்களும் இல்லாமல் நடத்தி, அரசின் பாராட்டை பெற்றுள்ளோம். அதே போல் நிகழாண்டிலும் பொங்கல் திருவிழாவினையொட்டி, எருது விடும் திருவிழா நடத்த அனுமதியளிக்க வேண்டும். மேலும், அரசு பதிவேட்டில் விடுபட்ட சின்னேப்பள்ளி, சின்னஒரப்பம், கம்மம்பள்ளி, ஒண்டியூர், கொட் டாவூர், பாரூர், கோட்டக்கொல்லை, தேவசமுத்திரம், பாறையூர் (பெத்தனப்பள்ளி ஊராட்சி), சவுளூர், மருதேப்பள்ளி (மாசாணியம்மன்கோயில்), போலுப்பள்ளி, சாமல்பள்ளம், கே.பூசாரிப்பட்டி, காட்டிநாயனப் பள்ளி ஆகிய கிராமங்களில் எருதுவிடும் திருவிழாக்களை நடத்த அனுமதி வழங்க வேண்டும்.
அத்துடன் கால அட்ட வணையினை மாற்றி காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago