கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் வட்ட மாநாடு நடந்தது. தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் கண்ணு, மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சேகர், மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் மத்திய, மாநில அரசுகள் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 நாள் வேலையை 200 நாளாக மாற்றி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் விரிவுப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக நாள் ஒன்றுக்கு அரசு நிர்ணயித்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும். வேலை அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வேலை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 60 வயது முடிந்த அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும்.
எண்ணேகொல்புதூரில் இருந்து பெரிய ஏரிக்கு நீர் நிரப்பும் கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பர்கூர் வட்டாரத்தில் இயங்கி கொண்டிருக்கும் கிரானைட் குவாரி மற்றும் தொழிற்சாலைகளில் பர்கூர் வட்டத்தில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கி, அனைவருக்கும் வேலை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago