பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் அமைந்துள்ள தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 2020-21-ம் ஆண்டுக்கான கரும்பு அரைவை நேற்று தொடங்கியது.
குன்னம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஆர்.டி.ராமச்சந்திரன், பெரம்பலூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் ஆலையின் தலைமை நிர்வாகி முகமதுஅஸ்லம் அரைவையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், ஆலையின் தலைமை கரும்பு அலுவலர் அ.ரவிச்சந்திரன், துணைத் தலைமை பொறியாளர் அ.மணிவண்ணன், துணைத் தலைமை ரசாயனர் சு.மாதவன், தொழிலாளர் நல அலுவலர் இரா.ராஜாமணி மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆலையில் நடப்புப் பருவத்தில் பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களிலிருந்து 7,203 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள 2.10 லட்சம் டன் கரும்புகளை அரைவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த அரைவை மூலம் சர்க்கரை கட்டுமானம் அளவு 9.5 சதவீதம் வரை பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது என ஆலை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago