அதிமுக அரசின் ஊழல்களை மத்திய அரசு கண்டுகொள்ள வில்லை என்று திமுக இளை ஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
‘விடியலை நோக்கி ஸ்டாலி னின் குரல்’ என்ற தலைப்பில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இதன்படி, திமுக திருச்சி தெற்கு மாவட்டத் துக்குட்பட்ட பல்வேறு இடங்களில் நேற்று பிரச்சாரம் செய்தார். திருச்சி டிவிஎஸ் டோல்கேட், பாலக்கரை எடத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பேசியது:
அதிமுக ஆட்சியில் சாலை அமைக்க டெண்டர் விட்டதில் ரூ.6,000 கோடி, எல்இடி பல்பு பொருத்துவதில் ரூ.700 கோடி என பல்வேறு ஊழல்கள் நடை பெற்றுள்ளன. ஆனால், இவற்றை யெல்லாம் மத்திய பாஜக அரசு கண்டுகொள்ளவில்லை.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திமுக உட்பட அனைத்து கட்சியினரும் எதிர்க் கின்றனர். ஆனால், அந்தச் சட்டங்களால் எந்த பாதிப்பும் இல்லை என்கிறார் முதல்வர் பழனிசாமி. வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை 234 தொகுதிகளிலும் மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
முன்னதாக, மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் மல்லிகைப்பட்டி சமத்துவபுரத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியது:
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் கூறிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதுகுறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் கமிஷனில் இதுவரை ஒருமுறைகூட ஆஜராகவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் வேலை நாட்களை 150 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பிரச்சாரத்தின்போது, திமுக திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ உடனி ருந்தார். திருச்சி மாவட்டத்தில் பிரச் சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு பல்வேறு இடங்க ளிலும் திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago