மோட்டார் வாகன திருத்த சட்டத்தை அமல்படுத்துவதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே அனைத்து போக்குவரத் துத் தொழிலாளர் சங்கத்தினர் (சிஐடியு) நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தின் மாவட்டத் தலைவர் க.முகமதலிஜின்னா தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் பி.வீரமுத்து, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.தர், சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ரத்தினவேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மோட்டார் வாகன திருத்த சட்டத்தை அமல்படுத்துவதை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல் வரியை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago