காவேரி மருத்துவமனை சார்பில் பாடல் போட்டியில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு

By செய்திப்பிரிவு

திருச்சி காவேரி மருத்துவமனை யில் புற்றுநோய் சிகிச்சை பெற்று வரும் ஏழைக் குழந்தைகளின் சிகிச்சைக்காக திருச்சி மூன்ராக் ரவுண்ட் டேபிள் 108 டிரஸ்ட் நிதியுதவி வழங்கி வருகிறது.

இந்நிலையில், குழந்தைகள் புற்றுநோய் குறித்த விழிப்பு ணர்வுக்காக, திருச்சி மூன்ராக் ரவுண்ட் டேபிள் 108 டிரஸ்ட், காவேரி மருத்துவமனை மற்றும் ஸ்கூல் ஸ்கைஸ் சார்பில் குழந் தைகள் தினத்தையொட்டி ‘சிங் பார் ஹோப்’ என்ற பாடல் போட்டியை ஆன்லைன் மூலம் நடத்தியது. இப்போட்டியில் ஏராள மான குழந் தைகள் தங்களது பாடல் காணொ லிகளை பதிவு செய்திருந்தனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஆன்லைன் மூலமாக அண்மையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இந்தியன் ஆயில் நிறுவன துணைப் பொது மேலாளர் செல்வம், ரவுண்ட் டேபிள் இந்தியா தேசியத் தலைவர் பிரிமேஷ் ஷா, பகுதித் தலைவர் பவுல் ஜான் சக்கோலா ஆகியோர் பங்கேற்று பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

இதில், சென்னை நதானியா எரிகா தாமஸ், கோழிக்கோடு நிரஞ்சனா, சென்னை சம்யுக்தா ரகுராமன் ஆகியோர் முறையே முதல் 3 பரிசுகளை வென்றனர். இவர்களுக்கு முறையே ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து, காவேரி மருத்துவமனை மருத்துவர் வினோத், ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கி வரும் சேவைகள் குறித்து செயல் இயக்குநர் செங்குட்டுவன் ஆகியோர் பேசினர். ஏற்பாடுகளை திருச்சி மூன்ராக் ரவுண்ட் டேபிள் 108 டிரஸ்ட் தலைவர் மது, நிர்வா கிகள் செல்லாராம், தீக்.ஷா செங்குட்டுவன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.l

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்