திருப்பத்தூரில் அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பயன்படுத்தப்பட வுள்ள வாக்குப்பதிவு இயந்திரங் களின் முதற்கட்ட பரிசோதனை நேற்று நடைபெற்றது.
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அரசியல் கட்சியினர் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பயன்படுத்துவ தற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த மாவட் டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
திருப்பத்தூர் மாவட்டம் திருப் பத்தூர், ஜோலார்பேட்டை, வாணி யம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ள 6,180 மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்கள், மகாராஷ்டிரா மாநிலம் ‘பீட்’ மற்றும் ‘சோலாப்பூர்’ மாவட்டங்களில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டு, திருப்பத்தூர் வேளாண் உற்பத்தியாளர் விற்பனை கூட்டுறவு சங்கம் கிடங்கில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. இந்த கிடங்குக்கு 24 மணிநேரமும் ஆயுதம் ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதற்கட்ட பரிசோதனை நேற்று தொடங்கியது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலை யில், முதற்கட்ட பரிசோதனைகள் நடைபெற்றன. மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமையில் இந்த பரிசோதனை தொடங்கியது.
இதில், பேலட் யூனிட், விவிபேட் கருவி, வாக்குப்பதிவு இயந்திரம் ஆகியவை சரியாக இயங்குகிறதா? அதில் ஏதேனும் பழுது ஏற்பட்டுள்ளதா? என்பதை ‘பெங்களூரு பெல்’ நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் சரிபார்த் தனர். 6,180 வாக்குப்பதிவு இயந்தி ரங்களையும் முழுமையாக பரி சோதனை செய்து, அதில் பழுது ஏற்பட்டுள்ள வாக்கு இயந் திரங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், நல்ல நிலையில் இயங்குகின்ற இயந்திரங்களை மட்டும் பாதுகாப்புடன் வைக்கவும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்கெனவே பதிவாகியுள்ள ‘டேட்டாக்களை’ அகற்றும் பணி யில் பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பணிகள் அடுத்த 15 நாட் களுக்கு நடைபெறும் என்றும், அதன் பிறகு மாதிரி வாக்குப்பதிவு செய்யப்படும் என திருப்பத்தூர் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், திருப்பத்தூர் டிஆர்ஓ தங்கய்யாபாண்டியன், சார் ஆட்சியர் வந்தனாகர்க், துணை ஆட்சியர் அப்துல் முனீர், வட் டாட்சியர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago