கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்றுநடைபெற்ற தேசிய திறனாய்வு தேர்வில் 2,181 பேர் பங்கேற்றனர்.
பள்ளிகளில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களின் மேற்படிப்புக்கு, கல்வி உதவித்தொகை வழங்கும் நோக்கில் ஆண்டுதோறும் தேசியதிறனாய்வுத் தேர்வு நடத்தப் படுகிறது. என்சிஇஆர்டி நடத்தும் இந்தத் தேர்வானது 2 நிலைகளை உள்ளடக்கியது. முதல்கட்டத் தேர்வு மாநில அளவிலும், அதில் தேர்ச்சி பெறுவோருக்கு 2-வது கட்டமாகத் தேசிய அளவிலும் தேர்வு நடைபெறும்.
தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வு மூலம் மொத்தம் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும்போது மாதம்தோறும் ரூ.1,250-ம், அதன்பிறகு இளங் கலை, முதுகலை பட்டப் படிப்பு படிக்கும்போது மாதம்தோறும். ரூ.2,000-ம் வழங்கப்படும். மேலும், பி.எச்டி படிப்புக்கும் உதவித்தொகை பெறலாம்.
அந்த வகையில் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு 20 பள்ளிகளில் இருந்து 2,271 மாணவர்கள் விண் ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில் 2,181 பேர் தேர்வு எழுதினர்.90 பேர் தேர்வெழுத வில்லை.
உளுந்தூர்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் க.முனுசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago