கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் புதிய வேளாண்மை விரிவாக்க மையக் கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையக் கட்டிடம் அமைக்க பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தரைதளத்தில் வேளாண் தோட்டக்கலை மற்றும் விதைச் சான்றுகள் சேமிப்பு வசதிகளும், முதல் தளத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, விற்பனைத்துறை, விதைச் சான்று மற்றும் வேளாண்மை பொறியியல் துறைக்கான அனைத்து வசதிகளுடனும் அமையவுள்ளது. இரண்டாவது தளத்தில் விவசாயிகளுக்கான பயிற்சி மற்றும் கூட்ட அரங்கும் அமையவுள்ளது, என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, வேளாண் இணை இயக்குநர் சி.சின்னசாமி, கோபி வருவாய் கோட்டாட்சியர் சி.ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago