தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு திருச்சியில் மநீம தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

வரும் சட்டப்பேரவை தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என மக்கள் நீதி மய்யம் கட்சி யின் தலைவர் கமல்ஹாசன் தெரி வித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் 3-ம் கட்ட பிரச்சாரத்தை திருச்சியில் நேற்று தொடங்கினார். மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தலைப்பில் தொழில்முனைவோர் பங்கேற்ற கூட்டத்தில் அவர் பேசியது:

எளிமையானவர்கள், அதிகம் படிக்காதவர்கள்தான் நல்லாட் சிக்கான ஏற்பாடுகளைச் செய்தவர் கள். அந்த வரிசையில்தான் நானும் இருக்கிறேன்.

தமிழகத்தின் பொருளா தாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்த மக்கள் நீதி மய்யம் திட்டம் வைத்துள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படும். மூலப் பொருட்களை அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலமாக தமிழகத்தை மாற்றி, சிறு நகரங் களில் தொழிற்பேட்டைகள் உரு வாக்கப்படும். அனைத்து நகரங் களிலும் வர்த்தக மையம் அமைக் கப்படும். உலகத் தரத்திலான தொழில்நுட்பங்களைக் கொண்டு குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனா ளிகள் சங்கம் சார்பில் மாரிக் கண்ணன் என்பவர் அளித்த மனுவைப் பெற்றுக் கொண்ட கமல்ஹாசன், “சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும்” என வாக்குறுதி அளித்தார்.

அதைத்தொடர்ந்து, சிந்தாமணி அண்ணா சிலை, ரங்கம் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது:

மாற்றத்துக்கும், புதிய அரசியல் புரட்சிக்கும் தமிழகம் தயாராகிவிட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் நான் செல்லுமிடமெல்லாம் மக்கள் அதிகளவில் கூடி உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். இனி நான் நட்சத்திரமாக அல்ல, ஒவ்வொருவரின் வீட்டிலும் சிறு விளக்காக இருக்க விரும்புகிறேன். பெண்கள் நினைத்தால் அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்றார்.

அப்போது, கட்சியின் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன், பொதுச் செயலாளர் எம்.முருகானந்தம், கமல்ஹாசனின் மகள் அக்ஷரா மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்