திருநெல்வேலி மாநகராட்சியில் குப்பை வரியை ரத்து செய்ய ஜீவகாருண்யம் மனிதநேய சங்கம் வலியுறுத்தி யுள்ளது.
இது தொடர்பாக அதன் நிறுவன தலைவர் தெ.ஆறுமுகம், மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள மனு:
சென்னை மாநகராட்சி நிர்வாகம் சமீபத் தில் குப்பைக்கான வரிவிதிப்பை அறிவித்தது. இதை மக்களும் பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்த்தனர். இதனால் தமிழக அரசு இந்த வரிவிதிப்பை ரத்து செய்துள்ளது.
ஆனால், திருநெல்வேலி மாநகராட்சியில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் குப்பை வரி, சொத்துவரியுடன் சேர்த்து கட்டாய மாக வசூலிக்கப் பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் இந்த வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்ட உடனே, மக்கள் எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. திருநெல்வேலி மாநகராட்சியில் மட்டும் குப்பை வரி விதிப்பை தொடர்வது எந்தவகையிலும் நியாயமில்லாதது.
எனவே, குப்பை வரியை உடனே ரத்து செய்வதுடன், கடந்த 2018-ம் ஆண்டு முதல் வசூலிக்கப்பட்ட வரியை திருப்பி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago