புதுப்பாளையம் அடுத்த சேந்த மங்கலத்தில் மினி கிளினிக்கை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச் சந்திரன் திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் அடுத்த சேந்த மங்கலம் கிராமத்தில் மினி கிளினிக் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசும்போது, “தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் மருத்துவ சிகிச்சை கிடைக்க, 2,000 மினி கிளினிக் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 73 மினி கிளினிக்குகள் திறக்கப்படவுள்ளன. முதற் கட்டமாக 23 மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன. சேந்தமங்க லத்தில் திறக்கப்பட்டுள்ள மினி கிளினிக் மூலம் 6 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள்” என்றார்.
பின்னர் அவர், கர்ப்பிணி களுக்கு மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். இதேபோல், ஆரணி அடுத்த முள்ளிப்பட்டு கிராமம், போளூர் அடுத்த படைவீடு கிராமத்தில் மினி கிளினிக்குகளை அமைச்சர் திறந்து வைத்தார்.
மாணவர்களுக்கு மிதிவண்டி
முன்னதாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் 2020-21-ம் கல்வி ஆண்டில் பிளஸ் 1 படிக்கும் 22,688 மாணவ, மாணவிகளுக்கு ரூ.9 கோடியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.இதையொட்டி, போளூர் அடுத்த படைவீடு, ரேணுகொண்டாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் ரூ.36 லட்சம் மதிப்பில் 926 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதில், தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கலசப்பாக்கம்
கலசப்பாக்கம் தொகுதிக் குட்பட்ட மட்டவெட்டு கிராமத் தில் மினி கிளினிக் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன் முன்னிலை வகித்தார்.வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டபிரபு வரவேற்றார். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு மினி கிளினிக்கை திறந்து வைத்துப் பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago