கோபி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட சாவக்காட்டுப்பாளையத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மினி கிளினிக்கை திறந்து வைத்தார். மேலும், ரூ.32.95 லட்சம் மதிப்பில் பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில், கோபி வருவாய் கோட்டாட்சியர் சி.ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஆசிரியர்களுக்கு 52 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இந்தாண்டு 36 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago