காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.10 கோடிமதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நேற்று மீட்கப்பட்டன.
காஞ்சிபுரத்தில் மிக உயர்ந்த கோபுரத்தை உடைய கோயில் ஏகாம்பரநாதர் கோயில். இந்தக் கோயிலுக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இடங்கள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ளன. ஆனால் இந்தக் கோயிலுக்கு சொந்தமான இடங்களை நீண்ட காலமாக பலர் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். அது தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தகே.பி.மணி மற்றும் சுரேஷ் குடும்பத்தினர் வசமும் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்புள்ள இடம் இருந்தது. இந்த இடத்தை மீட்பது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத் துறைக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது.
இதைத் தொடர்ந்து இதுவரை ஆக்கிரமிப்பில் இருந்த ஆலடி பிள்ளையார் கோயில் தெருவில் இருந்த ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்புள்ள இடத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டனர்.
மேலும், போலீஸார் உதவியுடன் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜெயா தலைமையில் கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பில் இருந்த கோயிலுக்கு சொந்தமான இடத்தை மீட்டு, அங்கு அறிவிப்பு பலகை வைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago