பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகம் முகக்கவசம் அணியாமல் திரண்ட மக்கள் நெல்லை வண்ணார்பேட்டை ரேஷன் கடை மூடல்

By செய்திப்பிரிவு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் தலா ரூ.2,500 ரொக்கம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, முழு கரும்பு அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று, தமிழக அரசு அறிவித் திருக்கிறது. இதற்கான டோக்கன் விநியோகம் அனைத்து ரேஷன் கடைகளிலும் நேற்று தொடங்கியது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 796 ரேஷன் கடைகள் மூலம் 4,57,098 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது. இதுபோல் மாவட்டத்தில் அகதிகள் முகாம்களில் உள்ள 635 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படுகிறது.

டோக்கன் விநியோகம் தொடங் கியதை அடுத்து ரேஷன் கடைகளில் ஏராளமானோர் திரண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல் வந்திருந்தனர். கரோனா நோய் தொற்று அச்சம் முழுமையாக விலகாத நிலையில், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக் கவசம் அணியாமலும் ஏராள மானோர் திரண்டதால் ரேஷன் கடை பணியாளர்கள் திணறினர். திருநெல்வேலி வண்ணார் பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், டோக்கன் விநியோகம் திடீரென்று நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் ரேஷன் கடையும் மூடப்பட்டது.

சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்கவும், முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே டோக்கன் விநியோகிக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வேண்டும் என்பது, சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

வீடுகளுக்கு சென்று டோக்கன்

தென்காசி மாவட்டத்தில் அரிசி பெறும் 4,38,515 ரேஷன் கார்டுகள், இலங்கைத் தமிழர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 178 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. வருகிற 30-ம் தேதிக்குள் வீடுதோறும் சென்று ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் எந்தவித சிரமமும் இன்றி, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சென்று பொங்கல் சிறப்பு தொகுப்பை பெற்று பண்டிகையை கொண்டாடுமாறு ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்