சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பதிவுக்கட்டணம் குறைப்பு சலுகை வரும் மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மத்திய அரசின் கடன் திட்டத்தின் கீழ் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முத்திரைத் தீர்வை ரத்து மற்றும் பதிவுக்கட்டணம் குறைப்பு சலுகை 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு அறிவுறுத்தலின் பேரில், வணிகவரி, பதிவுத்துறை, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறு வனங்கள் துறை விரிவாக ஆய்வு செய்து, சுய சார்பு இந்தியா (ஆத்ம நிர்பர் பாரத்) திட்டத்தின் கீழ் 2021-ம் ஆண்டு மார்ச் 31-ம்தேதி வரை வங்கிகள், நிறுவனங்களில் இருந்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங் கள் கடன் பெறுவதற்கான பிணை ஆவணங்கள் தொடர்பான ஒப்பந்தம் பதிவு செய்யும்போது, செலுத்த வேண்டிய முத்திரை வரியில் இருந்து விலக்கு அளிக்கும் உத்தரவை பதிவுத் துறை பிறப்பித்துள்ளது.
மத்திய அரசின் சொத்து பிணை யில்லா அவசரகால கூடுதல் கடன் திட்டத்தில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 312 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஏற்கெனவே ரூ.11 ஆயிரத்து 538 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள தகுதியான நிறுவ னங்கள் இந்த திட்டம் முடிவடையும் காலம் வரை பயன்பெறலாம். தற்போது, மத்திய அரசு இந்த திட்டத்தை வரும் மார்ச் வரை நீட்டித்துள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஒவ்வொரு முறை கடன் மற்றும் கூடுதல் கடன் பெறும்போது பயன்பெறலாம்.
இதுகுறித்து மேலும் விவரம் தேவைப்படுவோர் இணை இயக்குநர்/பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், வேலூர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0416-2242412, 2242513 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொள்ளலாம்’’என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago