மரக்காணம், கடலூர், புதுச்சேரி பகுதி மீனவ கிராமங்களில் சுனாமி நினைவு தினம் இன்று அனுசரிப்பு

By செய்திப்பிரிவு

மரக்காணம், கடலூர், புதுச்சேரி பகுதி கடற் கரையோரங் களில் சுனாமி நினைவு தினம் இன்று அனுசரிக் கப்படுகிறது.

.மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட அழகன் குப்பம் முதல் கூனிமேடுகுப்பம் வரையில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரை பகுதி உள்ளது. இதில் 19 மீனவ கிராமங்கள் உள்ளன. கடந்த 26.12. 2004-ல் ஏற்பட்ட சுனாமியால் விழுப் புரம் மாவட்டத்தில் மரக்காணம் கடற்கரை பகுதிகளிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. மரக்காணத் தில் கரை ஒதுங்கிய உடல்கள் 31 . கரை ஒதுங்காமல் கடலோடு சென்றவர்களை கணக்கிட்டால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50-ஐ தாண்டும் என்கிறார்கள் இங்குள்ள மீனவ மக்கள்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ம் தேதி (இன்று) மீனவ கிராமங்களில் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. மீனவர்கள் யாரும்மீன் பிடிக்க இன்று கடலுக்கு செல்ல மாட் டார்கள். சுனாமி நினைவு நாளை அரசு எப்படி அனுசரிக்கிறது என்று மரக்காணம் அருகே வசவன் குப்பம் மீனவ கிராம மக்களிடம் கேட்ட போது, அவர்கள் கூறியது:

ஆரம்பத்தில் அரசு சார்பில் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக குறைந்தபட்சம் கிராம நிர்வாக அலுவலர்கள் கூட நினைவு நாளுக்கு வருவதில்லை.

3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இயற்கையாக உருவான வம்பா மேடுகள் என அழைக்கப்படும் மணல் மேடுகள்தான் சுனாமியின் போது ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற் றியது. 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 150 மீட்ட ருக்கு உள்ளே இருந்த கடல் தற்போது எங்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகே வந்துள்ளது.

எங்கள் குப்பத்தை கடந்து வம்பா மேடு எனப்படும் மணல் மேடுகள் கடற்கரையில் நீண்டு உள்ளது. இந்த மேடுகள் தனியார் நிலமாக இருந்தாலும் கடற்கரையிலிருந்து 500 மீட்டர் நீளத்திற்கு மணல் அள்ளக்கூடாது. மேடுகளை கரைக்கக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்த ரவை யாரும் பொருட்படுத்துவதில்லை.

கடந்த 2008-ம் ஆண்டு அரசு சார்பில் 252 பேருக்கு சுனாமி குடியிருப்பு வழங்க திட்டமிடப்பட்டது. அதில் 90 குடும்பத்தினருக்கு இதுவரை வீடுகள் கொடுக்கப்படவில்லை மீன்பிடிக்கும் உபகரணங்களை பாதுகாக்க சமுதாயக்கூட மும் இல்லை. அரசு வழங்கிய வீடுகளுக்கு இதுவரை பட்டாகூட வழங்கவில்லை என்றனர்.

இதே போல் கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி பகுதி மீனவர்களும் தங்கள் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர். இங்குள்ள கடற்கரைப் பகுதிகளில் மீனவர்களால் சுனா மியில் உயிரிழந்தோருக்கு இன்று அஞ்சலி செலுத்தப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்