பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொலிக்காட்சி வாயிலாக நேற்று முன்தினம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஆட்சியர் த.ரத்னா, தலைமை வகித்து, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இதில் விவசாயிகள் பேசியது:

செங்கமுத்து: நிவர், புரெவி புயல்களால் ஏற்பட்ட மழையின் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம், நெல், மிளகாய் உள்ளிட்ட அனைத்து பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட பயிர்களை அரசு ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்.

அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தலைவர் தங்க.சண்முகசுந்தரம்: மாவட்டத்தில் உள்ள 2,322 நீர்நிலைகளையும் தூர்வார சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும். சிமென்ட் ஆலைகளுக்கு சுண்ணாம்புக்கல் வெட்டி முடிக்கப்பட்ட சுரங்கங் களை நீர்த்தேக்கங்களாக மாற்ற வேண்டும்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பூ.விசுவநாதன்: மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் விவசாயிகளுக்கு விரைந்து மின் இணைப்பு வழங்க வேண்டும்.

பின்னர் பேசிய ஆட்சியர், விவ சாயிகளின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.சுந்தர் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்