பெரம்பலூர் மாவட்டத்துக்கு 2021-22-ம் ஆண்டுக்கு ரூ.4,424 கோடியில் வங்கி கடன் திட்ட அறிக்கை

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டத்துக்கு 2021-22-ம் ஆண்டுக்கு ரூ.4,424 கோடி மதிப்பிலான வளம் சார்ந்த வங்கி கடன் திட்ட அறிக்கையை ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியர் ப.வெங்கட பிரியா அண்மையில் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் தெரிவித்தது: பெரம்பலூர் மாவட்டத்துக்கான நபார்டு வங்கியின் 2021-22-ம் ஆண்டுக்கான திட்ட அறிக்கை பல அரசு துறை, வங்கிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. வளம் சார்ந்த கடன் திட்டம் மதிப்பீடான ரூ.4,424 கோடியில் ரூ.3,500 கோடி வேளாண் துறைக்கும், ரூ.348 கோடி சிறு, குறு தொழில்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கல்விக் கடன், வீட்டுக்கடன், ஏற்றுமதி கடனுக்காக தனித்தனியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதில், ஐஓபி மண்டல மேலாளர் லட்சுமி நரசிம்மன், நபார்டு வங்கி மேலாளர் நவீன்குமார், முன்னோடி வங்கி மேலாளர் அருள், மாவட்ட தொழில்மைய மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்