திருவள்ளூர் மாவட்டத்தில் ஜன.10-க்குள் 64 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் விவசாயிகள் கூட்டத்தில் ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் காணொலி காட்சி மூலம் ‘விவசாயிகள் நலன் காக்கும் நாள்’ கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விவசாயிகள் தரப்பில், ஜெகன்னாதபுரம், குருவாயல், காரணி நிஜாம்பட்டு, வெண்பாக்கம், திருவாலங்காடு ஆகிய இடங்களில் கூடுதலாகநேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவேண்டும். பனப்பாக்கம், அவிச்சேரி, பெரவள்ளூர், காரணிநிஜாம்பட்டு, வஞ்சிவாக்கம், பாலவேடு ஆகிய பகுதிகளில் ஏரிகள் உட்பட பொதுப்பணித் துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய ஏரிகளையும் குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வாரி சீரமைக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இறுதியாக ஆட்சியர் பொன்னையா தெரிவித்ததாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு பிர்காவுக்கு ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், முதல்கட்டமாக மாவட்டத்தின் 64 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வரும் ஜனவரி 10-ம் தேதிக்குள் திறக்கப்படும்.

மூன்று போகமும் பயிர்சாகுபடி செய்யும் இடங்களில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் நிரந்தரமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க ஆவன செய்யப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை பொங்கலுக்கு முன்னர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்