விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற நாளை முதல் டோக்கன் விநியோகம் செய்யப்பட உள்ளது.
பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண் டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா ரூ.2,500 வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
அதன் பேரில் விழுப்புரம் மாவட்டத் திலுள்ள அனைத்து நியாய விலைக் கடை களிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.2,500 ஜனவரி 4-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை வழங்கப்படும். நியாய விலைக்கடைகளில் காலை 8.30 மணி முதல் நண் பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
கூட்ட நெரிசலை தவிர்க்க பொருட்டு நியாய விலைக்கடை பணியாளர்கள் வீடு வீடாக சென்று நாளை ( டிச.26) முதல் 30-ம் தேதி வரை டோக்கன் வழங்க உள்ளனர்.
ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் தனிவட் டாட்சியரை (பறக்கும் படை) - 9445045608 என்ற எண்ணிலும், ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டுஅறையை 04146 - 223265, 04146 - 229884 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வந்தாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பரிசுத்தொகுப்பு பெற வரும்குடும்ப அட்டைதாரர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago