வாக்கு எண்ணும் மையங்களில் அடிப்படை வசதி உள்ளதா? விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையங்களான வானூர்அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விழுப்புரம் இ.எஸ்.பொறியியல் கல்லூரி, விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக பொறி யியல் கல்லூரி, விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும்அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் ஆட்சியர் அண்ணாதுரை நேற்று ஆய்வு மேற்கொண் டார்.

இந்த ஆய்வின்போது வாக்கு எண்ணும் மையத்தில் காவல் கட்டுப்பாட்டு அறை, கணினி அறை, தேர்தல் பார்வையாளர் அறை, தேர்தல் நடத்தும் அலுவ லரின் அறை, இணையதள மற்றும்கணினி வசதியுடன் கூடிய ஊடகமைய அறை உள்ளிட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளையும் முழுமையாக ஏற்படுத்தி தர வேண் டும். அனைத்து அறைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத் தப்பட்டு கண்காணிப்பு வசதி கள் ஏற்படுத்திட வேண்டும் எனபொதுப்பணித்துறை அலுவ லர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது எஸ்பி ராதாகிருஷ்ணன், விழுப்புரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், டிஎஸ்பி நல்லசிவம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்