சிவகங்கை நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல்

By செய்திப்பிரிவு

சிவகங்கை நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோத னை செய்தனர். இதில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் அலுவலகம் உள்ளது. இங்கு துணை இயக்குநராக நாகராஜன் பணிபுரிந்து வருகிறார். இந்த அலுவலகத்தில் லே அவுட் அனுமதி பெறுவதற்கு கூடுதல் பணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார் எழுந்தது.

இந்நிலையில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கருப்பையா தலைமையில் இன்ஸ் பெக்டர்கள் குமாரவேல், சந்திரன், எஸ்ஐ ராஜாமுகமது உள்ளிட்டோர் சோதனையில் ஈடுபட்டனர்.

போலீஸார் அலுவலகத்துக்குள் நுழைந்ததும், உள்ளே இருந் தோரை வெளியே செல்ல விடாமல் கதவைப் பூட்டினர்.

தொடர்ந்து அவர்களிடமிருந்து மொபைல் போன்களை வாங்கிக் கொண்டனர்.

தொடர்ந்து துணை இயக்குநர் மற்றும் ஊழியர்களின் இருக் கைகளில் சோதனையிட்டனர்.

இதில் துணை இயக்குநர் அறையில் கணக்கில் வராத ரூ.1 லட்சம் இருப்பது தெரியவந்தது. அப்பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்து இரவு வரை விசாரணை நடத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்