ஊழல் செய்வதற்காக திட்டங்களை செயல்படுத்தும் தமிழக அரசு தங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு

ஊழல் செய்வதற்காகவே தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப் பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

தேனியில் உள்ள திமுக அலுவலத்தில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

துணை முதல்வர் ஓ.பன்னீ ர்செல்வம் கேரள மாநிலத்தில் ரூ.2,000 கோடி சொத்து வைத்துள்ளதாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த கேரள பத்திரிகை மீதும், அது பற்றி பேசும் என் மீதும் ஓ.பன்னீர்செல்வம் எந்த வழக்கும் தொடரவில்லை. இதில் இருந்தே அவர் ஊழல் செய்து கேரளாவில் சொத்துச் சேர்த்தது உறுதியாகிறது.

இது குறித்து வருமானவரித் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். துணை முதல் வரின் ஊழலை முன்வைத்து சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பிரச்சாரம் மேற்கொள்ளும்.

தேனி எம்.பி ரவீந்திரநாத் ஊழல் பணத்தை முதலீடு செய்யவே மொரீஷியஸ் சென்றார் என்று குற்றம் சாட்டியுள்ளோம். இது தொடர்பாக துணை முதல்வர் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் வரவில்லை.

முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நேரடியாகவே மோதல் ஏற்பட்டுள்ளது. ஊழல் செய் வதற்காகவே தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரு கிறது. தேர்தலுக்காகத்தான் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.2,500 வழங்கப்படுகிறது.

திராவிட இயக்கங்களை சீமான் பழித்துப் பேசக்கூடாது. தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை இந்த இயக்கங்கள் கொண்டு வந்து ள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE