லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடைய முருகனின் இறப்புச் சான்றிதழ் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

By செய்திப்பிரிவு

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறையில் இறந்த திருவாரூர் முருகனின் இறப்புச் சான்றிதழ் திருச்சி நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரியில் கடந்த ஆண்டு அக்.2-ம் தேதி ரூ.13 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போயின.

இது தொடர்பாக திருவாரூரைச் சேர்ந்த முருகன், சுரேஷ், கனகவல்லி, மணிகண்டன், கணேசன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளியான முருகன் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

சுரேஷ் மற்றும் கணேசன் ஆகியோர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் சுரேஷ் உள்ளிட்ட 4 பேருக்கும் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டபோது, முருகனின் இறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, முருகனின் இறப்புச் சான்றிதழை நேற்று திருச்சி நீதிமன்றத்தில் போலீஸார் சமர்ப்பித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்