திருச்சி மாவட்ட மைய நூலகம் வாசகர் வட்டம் சார்பில் 53-வது தேசிய நூலக வார விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நேற்று முன்தினம் பரிசுகள் வழங்கப்பட்டன.
53-வது தேசிய நூலக வார விழா நவ.14 முதல் 20-ம் தேதி வரை நடைபெற்றது. இதையொட்டி, மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில் கதை சொல்லுதல், கட்டுரை எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்டன.
இதில், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கதை சொல்லும் போட்டியில் சஞ்சய்குமார், எம்.முகமது சுஹைல், க.பிரார்த்தனா ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை பெற்றனர்.
6 முதல் 8-ம் வகுப்புப் பிரிவில் விஷால், ஹரிப்பிரியா, சம்யுக்தா ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை பெற்றனர். இதேபிரிவில் தேஜஸ்வினி, எஸ். காருண்யா, சூரியபிரகாஷ் ஆகியோர் சிறப்புப் பரிசுகளை பெற்றனர்.
9 முதல் 12-ம் வகுப்புப் பிரிவில் தர்ஷினி, வருணேஸ்வரன், ஜெ. ரோஷினி ஆகியோர் முறையே முதல் 3 இடங்களைப் பெற்றனர். இதேபிரிவில் பிரியா, பூபதி, நர்மதா ஆகியோர் சிறப்புப் பரிசுகளை பெற்றனர்.
பொதுவான வாசகர்களுக்கான கட்டுரைப் போட்டியில் அந்தோனிசாமி, சேட் ஜமாலுதீன், எம்.சுசிலா ஆகியோர் முதல் 3 இடங்களைப் பெற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா மாவட்ட மைய நூலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மாவட்ட நூலக அலுவலர் அ.பொ. சிவக்குமார் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு, வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் வீ.கோவிந்தசாமி தலைமை வகித்தார். மைய நூலக முதல்நிலை நூலகர் கண்ணம்மாள் முன்னிலை வகித்தார். வாசகர் வட்ட துணைத் தலைவர்கள் வல்லநாடன், நன்மாறன், ஆலோசகர்கள் அருணாச்சலம், புலவர் மாரிமுத்து, இளையோர் வாசகர் வட்டத்தின் ஐஸ்வர்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago