சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
திருவள்ளுர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஒதப்பை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயபாரத்(18), குமரேசன்(21), சுந்தர்(27), புருஷோத்தமன் (25). இவர்கள் 4 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன் சங்கரன்கோவில் அருகே திருமலாபுரம் கிராமத்தில் உள்ள ஜெயபாரத்தின் நண்பரான விக்னேஷ் என்பவரின் வீட்டுக்கு வந்துள்ளனர். தனது நண்பர்கள் கார் மெக் கானிக் தொழில் தெரிந்தவர்கள் என்பதால் விக்னேஷ் தனக்கு தெரிந்த சங்கரன்கோவில் என்ஜிஓ காலனி அருகே உள்ள அரி என்பவரின் ஓர்க் ஷாப்பில் வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார். விக்னேஷ் வீட்டில் தங்கி சங்கரன் கோவிலுக்கு வேலைக்கு சென்று வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயபாரத், குமரேசன், சுந்தர் ஆகியோர் வேலை முடிந் ததும் இருசக்கர வாகனத்தில் திருமலாபுரத்துக்கு புறப்பட்டுச் சென்றனர். வாகனத்தை சுந்தர் ஓட்டியுள்ளார். மேலநீலிதநல்லூர் விலக்கு பகுதியில் சென்றபோது, எதிரே வந்த கார் மோதியதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். ஜெயபாரத் சுதாரித்து எழுந்து, குமரேசன் மற்றும் சுந்தரை தூக்க முயற்சி செய்தபோது அந்த வழி யாகச் சென்ற மற்றொரு கார் இவர் கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் சுந்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த குமரேசன், ஜெயபாரத் ஆகியோரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குமரேசன் உயிரிழந்தார். ஜெயபாரத் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். சின்னகோவிலான்குளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago