சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு திருப்பத்தூரில் மூலிகை கண்காட்சி தொடக்கம் அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்தார்

By செய்திப்பிரிவு

சித்த மருத்துவ தினத்தை முன் னிட்டு திருப்பத்தூரில் மூலிகைக் கண்காட்சியை அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று திறந்து வைத்தார்.

அகத்தியர் பிறந்தநாளை சித்த மருத்துவ தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று ‘சித்த மருத்துவ தினம்’ கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சுசி.கண்ணம்மா தலைமை வகித்தார். ஆண்டியப்பனூர் அரசு மருத்துவ மனையின் தலைமை சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார் முன் னிலை வகித்தார். முன்னதாக, வேலூர் புற்றுமகரிஷி சித்த மருத்துவமனை மருத்துவர் பாஸ்கர் வரவேற்றார். தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று மூலிகைக் கண்காட்சியை திறந்து வைத்தனர்.

அப்போது, அமைச்சர் கே.சி.வீரமணி பேசும்போது, ‘‘கரோனா பரவல் அதிகமாக இருந்தபோது அதற்கான தீர்வை கண்டறிந்தது சித்த மருத்துவம் தான். கரோனா தொற்றுக்கு கபசுர குடிநீர் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வர சித்த மருத்துவம் மிகச்சிறந்த பங்களிப்பை வெளிப்படுத் தியுள்ளது. நாட்றாம்பள்ளியில் தொடங்கப்பட்ட சிறப்பு சித்த மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, கரோனா உருமாற்றமடைந்து வெளிநாடுகளில் மீண்டும் வேகமாக பரவி வருகிறது.

எனவே, மீண்டும் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப் பட்டு வந்தாலும், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும். கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கைகளை சோப்புப்போட்டு கழுவ வேண்டும். இருப்பிடங்களை சுத்தமாகவும், சுகாதாரத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை பொதுமக்கள் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

இதைத்தொடர்ந்து, கரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக பணியாற்றிய சித்த மருத்துவர்கள் வி.விக்ரம்குமார் மற்றும் பாஸ்கர் ஆகியோருக்கு அமைச்சர் கே.சி. வீரமணி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். இதையடுத்து, வேலூர் புற்றுமகரிஷி சித்த மருத்துவமனை சார்பில் அமைக்கப்பட்டிருந்த மூலிகைக் கண்காட்சியை அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் ஆகியோர் பார்வையிட்டனர்.

நிகழ்ச்சியில், செங்கல்பட்டு குழந்தைப்பேறு சித்த மருத்துவர் சங்கர், சித்த மருத்து வர்களுக்கு தேவையான ஆலோ சனைகளை வழங்கினார். இதில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சித்த மருத்துவர்கள் பங்கேற்றனர் .

மிதிவண்டிகள் வழங்கும் விழா

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா திருப்பத்தூர் மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் வரவேற்றார். வணிகவரித் துறை துறை அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 22 அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 528 பேருக்கும், ஆம்பூர், ஜோலார்பேட்டை தொகுதிக் குட்பட்ட மாணவர்களுக்கும் 6 ஆயிரத்து 224 விலையில்லா மிதிவண்டிகளை அந்தந்த பகுதியில் நடந்த விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்