ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் நகரில் உள்ள பெரும் பாலான கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களின் பயன்பாடு அதிகரித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் சிவன் அருளுக்கு புகார் சென்றது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நகராட்சி அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர் சிவன் அருள் பிளாஸ்டிக் பயன்பாட்டை கண் காணித்து முழுமையாக கட்டுப் படுத்த வேண்டும் என உத்தர விட்டார்.

இதைத்தொடர்ந்து, நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் தலைமையில், நகராட்சி சுகாதார ஆய்வாளர் விவேக் மற்றும் நகராட்சி ஊழியர்கள் திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே நேற்று காலை ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலையில் உள்ள கடைகளில் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.

அப்போது, கோவையில் இருந்து வந்த கன்டெய்னர் லாரி ஒன்று பழைய பேருந்து நிலையம் அருகே நின்று பிளாஸ்டிக் மூட்டைகளை கீழே இறக்கியதை நகராட்சி அதிகாரிகள் பார்த்தனர். உடனே, அங்கு சென்று விசாரணைநடத்தியபோது, கன்டெய்னர் லாரி யில் 2 டன் எடையுள்ள தடை செய் யப்பட்ட பிளாஸ்டிக் கப், கேரி பேக், பிளாஸ்டிக் தட்டு உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியபோது, கோவையில் இருந்து சென்னைக்கு விற்பனைக்காக பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாகவும், வழியில் திருப்பத்தூரில் பிளாஸ்டிக் பொருட்கள் இறக்க வேண்டி யிருந்ததால் வாகனத்தை நிறுத்தியதாக தெரிவித்தார். இதையடுத்து, ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள் ஓட்டுநருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்