கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 20% ஒதுக்கீடு கேட்டு பாமக போராட்டம்

By செய்திப்பிரிவு

கல்வி மற்றும் வேலை வாய்ப் பில் வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. அதன்படி நேற்று பேரூராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது.அந்த வகையில், விழுப்புரம்மாவட்டத்தில் திருவெண்ணை நல்லூரில் மாநில துணைப்பொதுச் செயலாளர் தங்கஜோதி, விக்கிரவாண்டியில் மாவட்ட செயலாளர் புகழேந்தி, மரக்காணத்தில் மாநில துணைப்பொதுச் செயலாளர் சிவகுமார், செஞ்சியில் மாவட்ட செயலாளர் கனல்பெருமாள் தலைமையில் போராட்டம் நடை பெற்றது.

கடலூர்

கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக்கோரி காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி அலுவலகத்தில் பாமக மாநில செயற்குழு உறுப்பினர் பூக்கடை கண்ணன் தலைமையில் மனுகொடுக்கப்பட்டது. நகர செயலாளர் அன்பு செழியன், மாவட்ட துணை செயலாளர் பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள் ராஜேஷ், அன்ப ரசன், கலைக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இது போல குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் கோபி நாத் தலைமையில் மனுஅளிக்கப்பட்டது. மாநில துணைப்பொது செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பழ.தாமரைக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது போல மாவட்டத்தில் உள்ள 16 பேரூராட்சி அலுவல கத்திலும் பாமக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்