மினி கிளினிக்குகளின் பணி நேரம் குழப்பத்தால் மருத்துவர்கள் சிரமம்

By செய்திப்பிரிவு

மினி கிளினிக்குகளில் பணி நேரம் அறிவித் ததில் குழப்பம் நிலவுவதால் மருத்துவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சுகாதாரத்துறை சார்பில், சிவகங்கை மாவட்டத்தில் 37 மினி கிளினிக்குகள் தொடங்கப்படுகின்றன. முதல் கட்டமாக 14 இடங்களில் கிளினிக்குகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கிளினிக்குகளில் மருத்துவர், செவிலியர், மருத்துவப் பணியாளரை மாற்றுப் பணியில் நியமித்துள்ளனர். மேலும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் கிளினிக் செயல்படும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

பெரும்பான்மையான மினி கிளினிக் குகள் குக்கிராமங்களில் அமைந்துள்ளன. இதனால் பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரையிலான ஓய்வு நேரத்தில் மருத்துவர்களால் வீட்டுக்குச் செல்ல முடியாது. அவர்கள் கிளினிக்கிலேயே இருக்க வேண்டும். கூடுதலான நேரம் கிளினிக்கில் இருக்க வேண்டியுள்ளதால் மருத்துவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது:

தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் மினி கிளினிக்குகளில் பள்ளிச் சிறார் நலத்திட்டத்தில் பணிபுரியும் மருத்துவர்களை மாற்றுப் பணியாக நியமித்துள்ளனர். பள்ளிகள் திறந்தால் பள்ளி சிறார் நலத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் சிரமம் ஏற்படும். மேலும் கிளினிக் பணி நேரத்தை இரு பகுதியாகப் பிரித்து அறிவித்துள்ளனர். இதனால் காலையில் இருந்து இரவு வரை கிளினிக்குகளிலேயே தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பஸ் வசதியில்லாத கிராமங்களுக்குச் சென்று வர மருத்துவர்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்