தேர்தல் நேரத்தில் ஓசையின்றி எங்களது ஆதரவு வெளிப்படும் என வணிகர் சங்கங்களின் பேர மைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
தேனி மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப் பின் ஆறாம் ஆண்டு தொடக்க விழா மாவட்டத் தலைவர் செல்வக்குமார் தலைமையில் தேனியில் நடந்தது. செயலாளர் திருவரங்கநாதன், பொருளாளர் அருஞ்சுனை கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரம ராஜா பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறி யதாவது: எண்ணெய்களை பாக் கெட்களில் மட்டுமே அடைத்து விற்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு செய்யாத எண்ணெய் உற்பத்தியாளர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். சாமானியக் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது
தேனியில் மேம்பாலம் கட்ட உள்ளதால் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவர். டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவ சாயிகளை அழைத்து பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். வணிகர்கள் கட்சி தொடங்கப்போவதில்லை. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கட்சிகள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும். அதன்பின் நிர்வாகக் குழு கூடி முடிவெடுக்கும். தேர்தல் நேரத்தில் ஓசையில்லாமல் எங் களது ஆதரவு வெளிப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago