சென்னை தொழிற்சாலை கள் இணை இயக்குநர் தமிழ்ச்செல்வன், தொழிலா ளர் துறை உதவி ஆய்வாளர் உமாசங்கர் ஆகியோர் தலை மையிலான அலுவலர்கள், தாத்தையங்கார்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு பணி யாற்றி வந்த குழந்தைத் தொழிலாளர்கள் 14 பேரை மீட்டு, திருச்சியில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக தா.பேட்டை போலீஸார் விசாரித்து வரு கின்றனர்.
இதேபோல, டிச.18-ம் தேதி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டி ருந்த 14 முதல் 16 வயது வரை மதிக்கத்தக்க 3 சிறுவர்களை ரயில்வே போலீஸார் பிடித்து விசாரித்துள்ளனர். இதில், அவர்கள் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த வர்கள் என்பதும், திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள கார் இன்டீரியர் நிறு வனத்தில் வேலை செய்வ தற்காக சூரத்குமார்(27), கமலேஷ்(23) ஆகியோர் அவர்களை அழைத்து வந் ததும் தெரிய வந்தது. இதை யடுத்து, 3 சிறுவர்களையும் மீட்டு, சைல்டு லைன் அமைப்பினரிடம் ஒப்படைத்த துடன், அவர்களை அழைத்து வந்த சூரத்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago