சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங் கத்தின் மாவட்டத் தலைவர் ஆனந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கொளஞ்சி முன்னிலை வகித்தார்.

சத்துணவு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சட்டரீதியான குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணிக்கொடையாக ரூ. 5 லட்சம், சமையல் உதவியாளர்களுக்கு ரூ. 3 லட்சம் வழங்க வேண்டும். சத்துணவு மையங்களில் காலி யாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர், கோரிக்கைகள் அடங் கிய மனுவை ஆட்சியரிடம் வழங்கினர்.

அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத் தின் மாவட்டத் தலைவர் கொளஞ்சியப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சங்கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப.சத்தியவாணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 130 பேரும், புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் அருகே மாவட்டத் தலைவர் எஸ்.காமராஜ் தலைமையில், மாநில பொது செயலாளர் ஆர்.நூர்ஜஹான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்