கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர் சமூகத்துக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சென்னையில் பாமக சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களிடம் பாமக சார்பில் இட ஒதுக்கீடு கேட்டு மனு கொடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சி அலுவலகங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் பாமக சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்தது.
அதன்படி, வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டல அலுவலகங்களில் பாமகவினர் 20 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு நேற்று மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தினர். பாமக துணை பொதுச்செயலாளர் இளவழகன் தலைமையில் 3-வது மண்டல அலுவலகத்தில் பாமவினர் நேற்று மனு கொடுக்க வந்தனர்.
அப்போது. அங்கு வந்த காவல் துறையினர் நுழைவு வாயில் அருகே பாமகவினரை தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து, முக்கிய நிர்வாகிகள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு, மண்டல உதவி ஆணை யாளர் வெங்கடேசன் பணியில் இல்லாததால், ஆவேசமடைந்த பாமகவினர், நாங்கள் மனு கொடுக்க வருவதை முன்கூட்டிய அறிந்துக்கொண்ட உதவி ஆணை யாளர் வெளியே சென்றுவிட்டாரா? எனக்கேட்டு அலுவலக ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர், அலுவலகத்துக்கு வந்த மண்டல உதவி ஆணை யாளர் வெங்கடேசனிடம் மனுவை அளித்த பாமகவினர், அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட் டனர். அப்போது, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எனக்கூறி முழக்கம் எழுப்பினர்.
இதில், மாநில துணைத் தலைவர் என்.டி.சண்முகம், மகளிரணி தலைவி வரலட்சுமி, பாமக நிர்வாகி வெங்கடேசன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago