தி.மலை மாவட்டத்தின் முக்கிய நீர்த்தேக்கமான சாத்தனூர் அணையில் 3,754 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயலின் தாக்கத்தால் பரவலான மழை பெய்து முக்கிய ஏரிகள் நிரம்பின. தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணை 119 அடி உயரத்துடன் 7 ஆயிரத்து 321 மில்லியன் கன அடி கொள்ளளவு நீரை தேக்கி வைக்க முடியும். தென்பெண்ணையாற்றில் இருந்து அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருக் கிறது. அணைக்கு நேற்று காலை நிலவரப்படி 173 கன அடி வீதம் நீர் வந்துகொண்டிருந்தது. இதன்மூலம் சாத்தனூர் அணை 100 அடி உயரத்தை எட்டியதுடன் 3 ஆயிரத்து 754 மில்லியன் கனஅடிக்கு நீர் இருப்பும் உள்ளது. சாத்தனூர் அணை தற்போது 100 அடியை எட்டியுள்ளதால், வரும் ஜனவரி மாதம் பாசனத்துக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், மாவட்டத்தில் உள்ள மற்ற நீர்த்தேக்க அணைகளிலும் நீர் இருப்பு போதிய அளவுக்கு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குப்பநத்தம் அணை 60 அடி உயரத்துடன் 700 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும். அணையில் தற்போது 44.94 அடி உயரத்துடன் 384.60 மில்லியன் கனஅடிக்கு நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 86.11 கனஅடி வீதம் நீர்வரத்து இருக்கிறது. மிருகண்டாநதி அணை 22.97 அடி உயரத்துடன் 87 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும். அணையில் தற்போது 20.01 அடி உயரத்துடன் 70.713 மில்லியன் கன அடிக்கு நீர் இருப்பு உள்ளது.
செண்பகத்தோப்பு அணை 62.32 அடி உயரத்துடன் 287 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும். அணையில் தற்போது 58.02 அடியுடன் 242.868 மில்லியன் கனஅடிக்கு நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 75 கனஅடி வீதம் நீர்வரத்து இருக்கும் நிலையில் அதே அளவுக்கு ஆற்றில் தண்ணீரை திறந்துவிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago